வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வியாபார நிலையத்தின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வியாபார நிலையத்திலுள்ள காற்று சீரமைப்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கே விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைந்து செயற்பட்ட தீ அணைப்பு படை தீயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

 இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்