லண்டனின் கிங்ஸ்டன் நகரின் மேயராக இலங்கையைச் சேர்ந்த தமிழரான வைத்தீஸ்வரன் தயாளன் நேற்று பதவியேற்றார்.

ரொல்வத் வட்டாரத்தில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியிள்ளார்.

இந் நிலையில் கிங்ஸ்ரன் நகரத்தின் 183 ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்றார். 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த இவர், கடந்த 40 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகின்றார். மேலும் இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.