கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான 'லங்கா சதொச' நிறுவனமும் யூலீட் (You Lead)  நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை அமைச்சர் ரிஸாட் பதியுதீன் முன்னிலையில் இன்று கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளனர்.

'லங்காச தொச' நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம் மையப்படுத்துகின்றது. 

USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூலீட் நிறுவனம் இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றது. 

இந்தத்திட்டத்தை நடை முறைப்படுத்தும் யூலீட்  திட்டப்பணிப்பாளர் சார்ள்ஸ் கொங்கோனியும் 'லங்காசதொச' நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பராஸும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நான்கு வருடகால திட்டங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தம் வெற்றியளித்தால் 'லங்காச தொச' நிறுவனம் இலங்கையில் தரம்மிக்க ஒருவியாபார நிறுவனமாகவும் பாவனையாளர்களின் நலன்களை துரித கதியில் நிறைவேற்றும் நிறுவனமாகவும் திகழும் என அமைச்சர் ரிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகளும் USAID நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.