அதி விசம் கொண்ட "பப்பரக்கொப்பான்" குளவிகளால் உயிர் பயத்தில் மக்கள்

Published By: Digital Desk 7

24 May, 2018 | 04:43 PM
image

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குமானாயங்குளம் கிராமத்தில் உயர்ந்த மரங்களில் அதி விசம் கொண்ட 'பப்பரக்கொப்பான்' எனப்படும் ஒருவகை  குளவி கூடு உள்ளதால் அதனை அகற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிகவும் ஆபத்தானது இந்த தேன் குளவிகள் கடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பலரை தீண்டியுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் மத்தியிரல் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மக்கள் குறித்த பகுதியூடாக நடமாட அஞ்சுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பல முறை கிராம மக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும்  குழவிகளின் தீண்டுதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த 'பப்பரக்கொப்பான்' என அழைக்கப்படும் குறித்த குளவிக்கூட்டினை அகற்ற உறிய அதிகாரிகள் உடன் முன் வரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04