ஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே அந்த சேவைக்கு பொருத்தமானவர்கள் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய தேசிய கல்வியியற் கல்லூயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

"இது எமது நாட்டின் ஆசிரியர் சேவையில் மாத்திரம் காணப்படும் குறைபாடு அல்ல. நாட்டின் அரசியல்வாதிகளின் நிலைமையும் என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர்களது கல்விச் சான்றிதழில் உள்ள பிரச்சினையால் அல்ல. சேவையில் ஈடுபடும் போது பெற்றுக்கொள்ளும் ஆற்றல் திறமைகளே காரணமாகும். எமது நாட்டில் 14 இலட்சம் அரச சேவையாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த கணிப்பீட்டை மேற்கொண்டாலும் நிலைமை அவ்வாறே காணப்படும் 

பொலன்னறுவையின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த நான் பாடசாலையில் ஐந்து மணித்தியாலங்கள் கழித்த போதும் மிகுதி நேரத்தை வீட்டிலேயே  கழித்தேன். அது கூட ஒரு பாடசாலை போன்றதே எனக் கூறினால் மிகையாகாது.

எனது சிறிய வயதில் நான் வளர்ந்த பின்தங்கிய கிராமத்திற்கு உங்களைப் போன்றே பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் பெற்று வருகையில் பெரும்பாலும் அவர்கள் எமது இல்லத்தையே தங்களது தங்குமிடமாகக் கொண்டனர். எனது தாயாரும் ஆசிரியர் என்பதால் அதிபரும் எமது வீட்டில் குறைந்தது ஐந்து ஆசிரியர்களாவது தங்கியிருப்பார்கள். இதனால் எனது வீடும் எனக்கு ஒரு பாடசாலை போலவே அமைந்திருந்தது.

அக்காலத்தில் எமது ஊர் அவ்வளவு ஒழுங்காக இருக்கவில்லை. சாராயம் கள்ளு போன்றவை காணப்பட்டன. அத்கையதொரு கிராமத்தில் இருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாவதற்கு எமது வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களே காரணமாகும்.

உங்களது பணி தற்போது ஒரு தொழிலாக இனங் காணப்பட்ட போதிலும் அக்காலத்தில் அவ்வாறு கருதப்படவில்லை.

எந்தவொரு துறையிலும் பணிபுரியும் எந்தவொரு அரசியல்வாதியும், அரச உத்தியோகத்தர்களும், சமயத் தலைவர்களும், வர்த்தகர்களும் வெளிப்படுத்தும் முன் மாதிரியே அவர்களது சேவையின் பெறுமதியும் கௌரவமும் தங்கியுள்ளது.

இந்த நாட்டின் கல்வி அமைச்சிற்கும் மாகாண சபைகளுக்கும் உரிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதுடன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள் என்பதை கல்வியமைச்சர் அறிவார்

அண்மையில் ஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோர் அந்த சேவைக்கு பொருத்தமானவர்கள் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் அவதானித்தேன். அதற்கு அவர்களது கல்விச் சான்றிதழில் உள்ள பிரச்சினையால் அல்ல. சேவையில் ஈடுபடும் போது பெற்றுக்கொள்ளும் ஆற்றல் திறமைகளே காரணமாகும்.

அந்த அறிக்கையை நான் வாசித்தேன். இது எமது நாட்டின் ஆசிரியர் சேவையில் மாத்திரம் காணப்படும் குறைபாடும் அல்ல. எமது நாட்டின் அரசியல்வாதிகளின் நிலைமையும் அதுவே. எமது நாட்டில் 14 இலட்சம் அரச சேவையாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த கணிப்பீட்டை மேற்கொண்டாலும் நிலைமை அவ்வாறே காணப்படும். இதனை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.