நிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர்  இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தாய் மற்றும் மகன் வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாயார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.