சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 7 ஆம் திகதியன்று பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இதில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூத்த நடிகை சிம்ரன் அவர்களையும், பொபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ஆகியோர்களையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்ட போது,

"சிம்ரன், பொபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம்."என்றார்.

பொபி சிம்ஹா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகிர்தண்டா படத்தில் நடித்து தேசிய விருதைப் பெற்றவர் என்பதும் சனத் ரெட்டி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.