வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது : முதல்வர் எடப்பாடி

Published By: Digital Desk 7

24 May, 2018 | 01:57 PM
image

தூத்துக்குடியில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியது விரும்பதகாத சம்பவம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

"இன்று காலை 11 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பெயரில் நான் கலந்து கொண்டேன். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென எழுந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டத்தில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசியுள்ளார்.

 2013ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆலையின் பணியை நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்தது விரும்பத்தகாத சம்பவம். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில பேர் செயல்பட்டு கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலியாக்கிவிட்டனர். வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.’"என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33