(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கிவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன் தெரிவித்தார். 

மின்னல் தாக்கம், மரம் முறிந்து வீழ்ந்தமை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அல்லது நீரில் மூழ்கி மற்றும் மண்சரிவு என்பவற்றின் காரணமாக இதுவர‍ை உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சில ஊடகங்களில் தவாறாக காட்டுக்கின்றனர். இவை தொடர்பில் அனைத்து ஊடகங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்ற எண்ணிக்கையை ஊடகங்கள் சரியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.