சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சர்வதேச செஞ்சிலுவை குழு பார்வையிடுவதற்கு அனுமதிப்பது  தொடர்பில் அந்த அமைப்புடன் அரசாங்கம் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் யோசனையை சர்வதேச செஞ்சிலுவை குழு முன்வைத்ததை தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

முன்னைய அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவை குழுவுடன் இவ்வாறானதொரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

எனினும் யுத்தத்திற்கு பிந்திய சூழலை கருத்தில் கொண்டு செஞ்சிலுவை குழு புதிய உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றது.