(எம்.ஆர்.வஸீம்)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இன்று முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை நடத்தவிருந்த சகல பரீட்சைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை மத்திய வங்கி  பயிலுனர் உதவிப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இணைத்துக் கொள்ளும் பரீட்சை, இறக்குமதி விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப சேவையின் 111 ஆம் தரத்தின் விவசாய பண்ணை அதிகாரி, திட்ட அலுவலர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு இணைத்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை, இலங்கை மத்திய வங்கிப் பயிலுனர்களை இணைத்துக் கொள்ளும் பரீட்சை என சகலவித பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.