(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்த்திற்கு தற்போது “கோத்தா” பயம் பீடித்துள்ளது. அரசாங்கத்திலுள்ள சகல தரப்பினரும் தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபகஷ பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர் என மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

பொரளையில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்க தரப்பிற்கு  தற்போது தூக்கம் போவதுமில்லை. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக்சமரவிக்ரம உட்டபட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கோத்தபாய ராஜபக்ஷவை தூற்றிக்கொண்டிக்கின்றனர். ஏனெனில் அவர் மீதான பயம் அரசாங்கத்தின் சகல துறைகளிலும் தோற்றியுள்ளது என்றார்.