கிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் 34 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான வில்லியர்ஸ் இதுவரை 114 டேஸ்ட் போட்டிகளில் விளையாடி 8765 ஓட்டங்களையும் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9577 ஓட்டங்களையும் 78 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 1672 ஓட்டங்களுமாக மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந் நிலையில் தனது இந்த ஓய்வு குறித்த அறிவிப்பின்  மூலமாக தனது 14 வருடகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி  வைத்துள்ளார்.