ரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநர் வுத்கேட் கூறியுள்ளதாவது, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணிக்காக  ஹரிகேன் சிறப்பாக விளையாடிவருகிறார். அவரிடம் தலைமைத்தவ பண்புக்கான அற்புதமான திறமைகள் உள்ளன என்றார்.

இது தொடர்பாக ஹரிகேன் குறிப்பிடுகையில், உலகக் கிண்ண தொடருக்கு இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை எனக்கு மிகப்பெரிய கெளரவம் ஆகும். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என்றார்.