ஊரடங்கு சட்டத்தையும் மீறி தூத்துக்குடிக்கு சென்றமையினால் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது 12 பேர் கொல்லப்பட்டனர்

இதனைத் தொடர்ந்து இன்று அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு நேரில் சென்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கபட்ட மக்களை கண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றமையினால் தூத்துக்குடி தென்பாகம் பொலிஸ் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.