(இராஜதுரை ஹஷான்)

கப்பல்  தொழிற்துறையினை விருத்தி செய்யும் நோக்கில்  இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

வெளிநாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல்களில் பணிவுரிவதற்கு இரு நாடுகளினாலும் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களை பெற்றிருப்பது அவசியமாகும்.

இவ்வாறானதொரு  தொழில் தகைமை சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதாயின் இரு நாடுகளும் துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையில் மேற்படி ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு இணங்க அரசாங்கம் அனுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.