(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் ஆசிய பத்திரிகை சபையின் கூட்டுறவு மாநாட்டினை இம்முறை  இலங்கையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

 நிதி மற்றும் ஊடகத்துறை  அமைச்சு இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கும் என பொறுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தேசிய நல்லிணக்கத்தினை நெறிப்படுத்துவதும், ஏனைய நாடுகளின்  நடைமுறையில் காணப்படுகின்ற பொதுவான சமூகவியல் திட்டங்களை மக்கள் மத்தியில் செயற்படுத்துவதும். ஊடக சுதந்திரத்தினை பலப்படுத்துவதும் இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

தெற்காசிய நாடுகளில் ஊடக சுதந்திரத்தின் வகிபாகம் அவைகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டு இம்முறை இலங்கையில் இந்த மாநாடு இடம் பெறவுள்ளது. 

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பிரதான தளமாக ஊடகத்துறை காணப்படுகின்றது. ஊடகவியலாளர்களின் ஊடக சுதந்திரம் அரசியல் மயப்படுத்தக் கூடாது என்ற தொனிப்பொருளினை அடிப்படையாகக் கொண்டே இம்மாநாடு தெற்காசிய  நாடுகளுக்கிடையில் இடம்பெறுகின்றது.

இலங்கையின் தற்போது காணப்படுகின்ற ஊடகத்துறை சுதந்திரம் தொடர்பில் பல  விடயங்கள்  குறிப்பிடப்படவுள்ளது . அத்துடன் ஊடகத்துறை தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.  இம்மாநாட்டில் பங்கு கொள்கின்ற நாடுகளில் நடைமுறையில்  உள்ள ஊடகத்துறை தொடர்பிலான கொள்கைகள் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.