விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு நடவடிக்கையில் விமான படையினர் ஈடுபட்டுள்ளனர். 

விடுதலைப்புகலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியிலுள்ள முன்னாள் போராளியான முனியாண்டி ராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக  தகவல் கிடைத்துள்ளது. 

குறித்த விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து தர்மபுரம் 7ஆம் யூனிற் பகுதியிலுள்ள குறித்த வீட்டிற்கு  பொலிஸார், விமானப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் சென்றுள்ளதுடன் விமானப்படையினர் சற்றுமுன் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.