கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொது நூலக காணியின் ஒருபகுதியை விடுவிப்பதற்கு படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு கடந்த மாதம் நடை பெற்ற போது, 

குறித்த பொது நூலகத்தை அமைப்பதற்கு ஏதுவாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த நூலக காணியை விடுவிப்பதற்கு கோரும் பிரேரணை தவிசாளர் அ.வேழமாலிகிதனால் முன்வைக்கப்பட்டது.

  குறித்த தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், குறித்த நூலக காணியை விடுவிக்குமாறு கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் கோரிக்கை கடிதம் ஒன்று கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இதனை அடுத்து நேற்று கரைச்சி பிரதேச சபைக்கு வருகை தந்த  இராணுவ கட்டளை தளபதி நஜீவ பொது  நூலக காணியில் ஒரு பகுதியை பிரதேச சபைக்கு கொடுப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும்  இல்லை எனவும் ஏனைய சிறு பகுதியினை தலைமை பீடத்துடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் .

தொடர்ந்து தவிசாளரையும்  மற்றும் செயலாளரையும் குறித்த நூலக காணிக்கு வரவழைத்து பிரதேச சபை உடன் பொறுபேற்க கூடிய காணிகளின் எல்லைகளை நேரில் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.