இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேலி செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தேர்தலில் பல புதிய முகங்களை காண்பது மகிழ்ச்சியாகவுள்ளது என மஹேல ஜயவர்த்தன தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இரசிகர்கள் பலரும் இதேபோன்று பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் எனக்கு ஆர்வம் இல்லை முன்னாள் வீரர்களிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பிரசாத் பெரேரா என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முட்டாள் கும்பல்-நாங்கள் புதிய தலைமுறையை பிரதிநிதித்துவம் செய்யும் என எதிர்பார்த்தோம், நிசாந்த ரணதுங்க ஊழலிற்கு பிரபலமானவர் என டிலான் ஜயசிங்க என்பவர் தெரிவித்துள்ளார்.