தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதனை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணம்  என வர்ணித்துள்ளார்.

அநீதிக்கு எதிராக போராடிய மக்களே தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணமாகும், அந்த மக்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர்  என ராகுல்காந்தி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.