யாழ்ப்பாணம் - கரவெட்டி, கரணவாய் கிழக்கில் இன்று காலை வேளையில்  மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

மின்சாரம் தாக்கி 58 வயதான தந்தையும் 32 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரவெட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.