இலங்கையானது கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பாரியளவு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகிறது. இதற்கு தீர்வாக இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE சீமெந்தின் நிலைபேறான கழிவு முகாமைத்துவ பிரிவான INSEE Ecocycle, சுமார் 15 வருடங்களாக கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபட்டு வருவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முகாமைத்துவ அர்ப்பணிப்புகளை பகிர்ந்து நாட்டின் அதிகளவு நாடப்படும் கழிவு முகாமைத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

தனியொரு நிறுவனமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை INSEE Ecocycleஇவ்வாண்டில் மேற்கொண்டு வருகிறது. தேசிய கழிவு முகாமைத்துவத்திற்கு மேலும் பெருமளவு பங்களிப்பை வழங்கும் உத்தேசத்துடன் விஸ்தரிக்கப்படவுள்ள இந்நிறுவனமானது தாய்லாந்தில் அமைந்துள்ள தனது தாய் நிறுவனமான INSEE Ecocycle இன் உலகத்தரம் வாய்ந்த வளங்களையும் இதற்காக பயன்படுத்துகிறது. 

அத்துடன் இலங்கையின் வியாபாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு “Ecocycle சூழல் தீர்வுகள்” தமது சேவைகளை அர்ப்பணிப்புடன் வழங்கவுள்ளது. ஆய்வுகூட சேவைகள், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் தொழில்துறைசார் தூய்மையாக்கல்கள், விசேடத்துவமான சரக்குக் கையாளல் சேவை, சூழல்சார் ஏற்பாடுகள், அவசர பதிலளிப்பு சேவை, நச்சுக்கழிவு அகற்றல் மற்றும் பல சேவைகள் இதில் உள்ளடக்கப்படவுள்ளது.

இலங்கையில் காணப்படும் பரிபூரண தொழிற்துறைசார் கழிவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் ஒரே நிறுவனமாக INSEE Ecocycle திகழ்கிறது. 100,000 MT வருடாந்த திறனுடன் பொது மக்களுக்கும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் ஆபத்தான கழிவுகளை நிர்வகிப்பதற்கு சூழலுக்கு நட்புறவான தீர்வுகளையும் வழங்குகிறது. அரசாங்க ஸ்தாபனங்கள் அடங்கலாக 400 க்கும் அதிகமான கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இந்த பங்களிப்பு வழங்கப்படுகிறது. இதுவரையில் இந்நிறுவனத்தால் 600,000 ஆவு க்கும் அதிகமான தொழிற்துறைசார் கழிவு, சூழலுக்கு பாதகமின்றி அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனது திறனை மேம்படுத்தும் நோக்கோடு இவ்வாண்டில் INSEE Ecocycle இனால் 345 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 15 வருடங்களில் 1.3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை கழிவு முகாமைத்துவத்தில் இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

INSEE Ecocycle பொது முகாமையாளர் சஞ்ஜீவ சூளகுமார இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

“புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனியார் நிறுவனம் எனும் வகையில் INSEE Ecocycle, எமது சகல பங்காளர்களுக்கும் “மனதுக்கு நிம்மதியான” சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து இயங்கும். தொழிற்துறைக்கு அவசியமான கழிவு முகாமைத்துவ தீர்வுகளை தொடர்ந்து பெற்றுக்கொடுப்பதுடன் தாய்லாந்தின் INSEE Ecocycle செயற்பாடுகளிலிருந்து பெறப்பட்ட நிபுணத்துவ அறிவையும் இதன் போது பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சூழல் சீராக்கல்களை மேற்கொள்ளல் ஆபத்தான கழிவுப் பொருட்களுக்கான விசேட சேவைகள் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவத்துக்கான பரிபூரண தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற சேவைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்;” என்றார்.

மேலும் அவர், “கடந்த தசாப்த காலத்தில் INSEE Ecocycle இனால் இலங்கையின் திண்மக் கழிவு இடருக்கு நிலைபேறான தீர்வுகள் வழங்கப்பட்டன. தற்போதும் எமது பொது மற்றும் தனியார் பங்காண்மைகளினூடாக வகைப்படுத்தப்பட்ட திண்மக் கழிவுகளுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது” என்றார்.

INSEE Ecocycle, ஒழுங்குபடுத்தல் தொழில்நுட்ப நியமங்களை நிவர்த்தி செய்வதுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ முறைகளையும் கொண்டுள்ளது. நிலங்களை நிரப்புவது அல்லது எரியூட்டுவது போன்றவற்றுக்கு மாறாக சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளுமற்ற தெரிவாக அமைந்துள்ளது. இந்த நிலையத்துக்கு அவசியமான சகல அங்கிகாரங்களும் பெறப்பட்டுள்ளன (சூழல் பாதுகாப்பு சான்றிதழ் மற்றும் திட்டமிடப்பட்ட கழிவு முகாமைத்துவ சான்றிதழ் மற்றும் ISO 9001, ISO 14001, ISO 17025 மற்றும் OHSAS 18001 போன்ற சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.)

INSEE சீமெந்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய உள்ளங்கமாக INSEE Ecocycle அமைந்துள்ளது. INSEE Ecocycle இனால் முன்னெடுக்கப்படும் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளுக்கு INSEE சீமெந்து தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கும். நிறுவனத்துக்கும் தனது பங்காளர்களுக்கும் மற்றும் முழுத் தேசத்துக்கும் அனுகூலமளிக்கக்கூடிய “சூழல் தீர்வுகளை” வழங்கும் துறையில் போட்டிகரத்தன்மை வாய்ந்த இலக்கை நாம் நிர்ணயித்துள்ளதுடன் குறிப்பாக தேசத்துக்கு தொடர்ச்சியாக நிலைபேறான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றுடன் கைகோர்த்து 928 கிலோகிராம் கொகெய்ன் ஹைட்ரோ குளோரைட் சீமெந்து சாம்பல் பதப்படுத்தலுக்காக அழிக்கப்பட்டிருந்தமை INSEE Ecocycle இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நீண்ட கால அடிப்படையில்,  INSEE Ecocycle இனால் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை தணிப்பதற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்குவது, புதுப்பிக்க முடியாத தீர்ந்துவிடக்கூடிய எரிபொருட்கள் பாவனையை குறைத்தல் மற்றும் இயற்கை மூலங்களை பேணுதல், சீமெந்து உற்பத்தி செயன்முறைகளுக்கு காணப்படும் தொழில்நுட்பங்களிலிருந்து பயன்பெறல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.