இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் எந்தவித மாற்றமும் நடைபெறாது, மூன்று போட்டிகளும் ஏற்கனவே அறிவித்த நேர அட்டவணைப்படியே நடைபெறும் என மேற்கிந்தியத்  தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஜொனி கிரேவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது இம் மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்‍கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இந் நிலையில் மேற்கிந்தியத் தீவு அணியின் நிதிநெருக்கடி காரணாக இத் தொடரின் அட்டவணையை மாற்றி ஒரு டெஸ்ட் போட்டியைக் குறைத்து 3 ஒருநாள் ‍போட்டிகளில் விளையாடு‍வோம் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரியிருந்தது. 

எனினும் இத் தொடரில் எந்தவித மாற்றமும் செய்யாது ஏற்கனவே அறிவித்த நேர அட்டவணைப்படி விளையாடுவோம் என ஜொனி கிரேவ் அறிவித்துள்ளார்.