கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் குமாரசாமி

Published By: Sindu

23 May, 2018 | 09:33 AM
image

பெங்களூரில் இன்று கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக குமாரசாமியும்  துணை முதல் மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரரும் பதவி ஏற்கின்றனர்.

பா.ஜனதா கர்நாடக சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது.

இந் நிலையில் ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்ததோடு, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்திருந்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கடந்த 19ஆம் திகதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஜனதா தளம்  தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் கட்சிக்கு முதல் மந்திரி பதவி உட்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல் மந்திரி உட்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.

இத் தகவலை கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24ஆவது முதல் மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடந்து முடிந்த பின்னர் ஏனைய  மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு "விதான சவுதா" கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளளது. இதற்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47