மேற்கு ஈரானில் சுமார் 10 மாகாணங்களில் நச்சுத் தன்மை கொண்ட காளான்களை உண்டதால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளாதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களுள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காளான்களால் ஏற்படும் நச்சுத் தன்மைக்கு பயனுறுதிப்பாடுள்ள மருந்து ஏதுவும் இல்லாதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் உதிரியாக விற்க்கப்படும் காளான்களை வாங்க வேண்டாம் எனவும் உரிய முறையில் பொதி செய்து விற்கப்படும் காளான்களை மட்டும் வாங்குமாறும் அந் நாட்டு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.