இயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது. தினமும் இதை காலை வேளையில் தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்: நீர், எலுமிச்சை சாறு, இரண்டு டீ ஸ்பூன் உப்பு 

  • சில நிமிடங்களிலேயே ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
  • இது உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது.
  • வைட்டமின் சி குறைபாட்டை குறைக்கவல்லது. 
  • நரம்பு மண்டலத்தை ஊக்குவிப்பதால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கப் பெறலாம்.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியகற்ற இந்த பானம் உதவுகிறது.
  • இரத்த சர்க்கரை உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்கள் இன்சுலின் அளவை சீராக்குகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்க கூடியது.
  • இதய நலன் உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள், சீரற்று இருக்கும் இதய துடிப்பை சீராக்க செய்கிறது, மற்றும் உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
  • இயற்கை முறையில் கருவளத்தை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஊக்குவிக்கிறது.