(எம்.எப்.எம்.பஸீர், ரி.விருஷன்)

யாழ்ப்பாணத்தில் பொது மக்களை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கி வந்த ஆவா குழுவின் மிக முக்கிய உறுப்பினரான போல் வெனிஸ்டன் என்பவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.நகரின் பிரதேசமொன்றில் அவர் மறைந்திருத்த போதே பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க நேற்று அதிகாலை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் வாள்வெட்டு, கொள்ளைகளுடன் தொடர்பு பட்டவர் எனவும் சந்தேகிக்கும் பொலிஸார் பல தடவைகள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோதும், அவர் தப்பி வந்துள்ளார். 

இந் நிலையிலேய‍ே நேற்று குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.