(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் தம்மை ஏமாற்றி விட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே இலங்கைக்கு சொந்தமான தீவொன்றை சீனா கேட்கின்றது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல  குணவர்த்தன தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  விவாதத்திற்கு எடுக்கப்பட்ட செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றினூடாக நாடு இன்று பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 

அந்த வகையில் இலங்கை, சீனா உடன்படிக்கையின் மூலமாக சீனா அரசாங்கத்தை இலங்கை ஏமாற்றிவிட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. அவர்கள் உடன்படிக்கை குறித்து உண்மையான நிலைப்பாட்டையே கூறுகின்றனர்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் பொய்யான காரணங்களை கூறி அனைவரையும் ஏமாற்றிவிட்டது. இன்று சீனாவை ஏமாற்றி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டார்கள். இதன் காரணமாகவே இன்று சீனா இலங்கையில் தீவு ஒன்றினை  கேட்கின்றது.

ஆகவே இப்போது சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.