(எம். நியூட்டன்)

முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவு  மாவட்டமானது யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களே அதிகளவாக காணப்படுகின்றது.

இவ்வாறான குடும்பங்களுக்கு துறைசார்ந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பவற்றினூடாக கிடைக்கப் பெறுகின்ற உதவிகளைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.