ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிப்பதற்கான பரிந்துரையை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளதாக சபநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அந்த வகையில் இது குறித்து அமைச்சர் மனோகணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் "அங்கஜன் இராமநாதனை  உபசபாநாயகர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக இன்று சபாநாயகர் கட்சி தலைவர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்" என பதவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.