இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படுகின்ற செயற்கை அனர்த்தங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. அவ்வனர்த்தங்களில் இறந்தவர்களின் அடையாளங்களை பெற்றுத்தருமாறு பல குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்த உடல்களை அகற்றுவதில் மற்றும் மரண பரிசோதனைகளில் சரியான வழிமுறைகளை கையாளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜயசிங்கே தெரிவித்தார்.

இன்று கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்ற , அனர்த்த  இறப்பு கொள்கை அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான மூன்றாவது ஆசிய மாநாட்டிலே சுகாதார மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜயசிங்கே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மேலைத்தேய வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் தடயவியல் மரண பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் சிறந்த வரலாறு காணப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவங்களுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் காணப்படுவதோடு, அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க சுகாதார அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுகள் கூட்டு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதனூடாக சிறந்த முறையில் செயற்பட்டுகின்றது. 

மரண பரிசோதனைகளை முன்னெடுப்பதிலும் இறந்த உடல்களை அகற்றுவதிலும் குறிப்பிடத்தக்களவு விருத்தியினை நோக்கமுடியாதுள்ளது. இச்செயற்திட்டத்தினூடாக மேற்படி செயற்பாடுகள் தொடர்பாக கவனமளிக்கப்பட்டு அது தொடர்பான சிறந்த வழிமுறைகளை கையாள்வது முடியுமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனர்த்தங்கள் தொடர்பாக பல கட்டுக்கதைகள் காணப்படுகின்றன. இறந்த உடல்கள் தொடர்பாகவுள்ள கட்டுக்கதைகளை கொண்டு இறந்த உடல்களை முடிந்தளவு விரைவில் புதைக்கவோ எரிக்கவோ செய்கின்றனர். பொது சுகாதார முறைகேடுகள் இடம்பெறுவதை நியாயப்படுத்துவதாக இது அமைகிறது.

இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படுகின்ற செயற்கை அனர்த்தங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. அவ்வனர்த்தங்களில் இறந்தவர்களின் அடையாளங்களை பெற்றுத்தருமாறு பல குடும்பங்கள் இதுவரையிலும் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இறந்த உடல்களை அகற்றுவதில் மற்றும் மரண பரிசோதனைகளில் சரியா வழிமுறைகளை கையாளப்பட வேண்டும்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம்,  தடயவியல் மரண பரிசோதகைளுக்கான கல்லூரி ஆகியன பாரட்டத்தக்க வகையில் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.