(யுவராஜ்)

தமிழ்நாடு - தூத்துக்குடியில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் பல பகுதிகளில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைகளை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது போராட்டத்தை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கி சூட்டையும் மேற்கொண்டுள்ளனர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதில் 5 பேர் கொள்ளப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் சாலையில் உள்ள மரங்களை வெட்டி சாய்த்தமையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் போராட்டத்தினை கட்டுப்படுத்த 2000 க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.