"ட்ரம்புடன் விளையாட வேண்டாம்"

Published By: Digital Desk 7

22 May, 2018 | 03:06 PM
image

"அதிபர் ட்ரம்புடன் விளையாட வேண்டாம்" என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு பேட்டியில் எச்சரித்துள்ளார்.

குறித்த பேட்டியில் மைக் மேலும், 

"அடுத்த மாதம் அதிபர் ட்ரம்பை சந்திக்கும் போது அவரை வைத்து விளையாடலாம் என்று கிம் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு அப்படி ஏதேனும் நடந்தால் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தையில் இருந்து ட்ரம்ப் வெளிநடப்பு செய்வார். 

அதிபர் ட்ரம்ப் பொது உறவுகள் பற்றி சிந்திக்கவில்லை அவர் சமாதானத்தை பற்றியே நினைக்கிறார்." என்று மைக் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறிய சில கருத்துகளால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்று வட கொரியா எச்சரித்திருந்தது.

வட கொரியாவில் "லிபியா மாதிரி" போன்ற ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால் 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாபி கொல்லப்பட்டார்.

 இந்நிலையில் உச்சிமாநாடு குறித்து கலந்தாலோசிக்க அதிபர் ட்ரம்பை தென் கொரியத் தலைவர் மூன் ஜே-இன் சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13