இனவாதம் மற்றும் மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மொரட்டுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இனவாதம், மதவாதம் மற்றும் சாதிவாதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நாட்டை ஆள்வது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள அமைச்சர் தோழமை உணர்வுடன் நாட்டை ஆளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை அகற்றியதன் மூலமே மலேசியா முன்னேற்றமடைந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருடர்கள் இல்லாத அரசாங்கம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் திருடர்களை கைதுசெய்து நீதியின் முன்நிறுத்தவேண்டும்  என தெரிவித்துள்ளார்.