(இராஜதுரை ஹஷான்)

புதிய பேருந்துக் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது, இதற்கிணங்கள் இன்று நள்ளிரவு முதல் 12.5 வீதத்தினால் கட்டணம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

நாட்டின் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பேருந்து கட்டணங்களை 12.5 வீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளித்தது. அந்த வகையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது தனியார் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு பிரயோகிக்க கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலே அரசாங்கம் இந்த கட்டண அதிகரிப்பினை வாழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.