ராஜஸ்தானில் பொலிஸ் பணிக்கு ஆள் எடுக்கும் முகாம் ஒன்றில் ஆண் பொலிஸ்காரர் ஒருவர் பெண் போட்டியாளர்களின் உடல் அளவுகளை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார் மாவட்டத்தில் வன பாதுகாப்பு பணிக்கு ஆள் எடுக்கும் முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களுக்கு, அங்கே இருந்த ஆண் பொலிஸ்காரர் ஒருவர் உயரம், மார்பளவு உள்ளிட்ட அளவுகளை எடுத்துள்ளார். இது வீடியோவாக இணையத்தில் வெளியானது.

இதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் போட்டியாளர்களுக்கு பெண் பொலிஸே இவ்வாறு செய்ய வேண்டும் என இந்த செயலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அம் மாநில காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண் முதல்வராக ஆளும் மாநிலத்தில், பெண் போட்டியாளர் ஒருவருக்கு உடல் தகுதித் தேர்வை ஆண் பொலிஸ் நடந்துவது கண்டிக்கத்தக்கது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இம்மாதத் தொடக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த பெண்களில் சுடிதார் அணிந்து வந்தவர்களை, அவர்களின் துப்பட்டாவை கழற்றித் தரும்படி அதிகாரிகள் கேட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

திருமண வாழ்வில் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் ஆண்களா நீங்கள் ? உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மாதுளம் பழம் click to read this post...

அந்தரங்கம் அறிவோம் :அண்மைக்காலமாக எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். Click to read this post...