இந்தியாவின் மிக பிரபல்யமான நடனக் கலைஞரும் கலை இயக்குனருமான தினா தம்பேயின் கதக் நடன நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் பிரபல நடன கலைஞரான  தினா தம்பே கதக் நாட்டியத்தில் நிருத்திய அலங்கார் பட்டம் பெற்றவர். மேலும் இவர் நடனத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.