மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த கினிகத்தேனை நகர பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அடிப்படையில் குறித்த வர்த்தகர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேசத்திற்கு  பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக பகுதிகளில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா,லக்ஷபான, கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் மழை ஓரளவு குறைந்திருந்தாலும் நீர் தேக்கங்களிலுள்ள நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது