சிரியாவின் விமானத்தளமொன்றிற்கு அருகில் பறந்த டிரோனை ரஷ்ய படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆர்.ஐ.ஏ. செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவின் ஹெமெய்மிம் விமானதளத்திற்கு அருகில் காணபட்ட டிரோனையே ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதன்போது உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை. குறிப்பிட்ட விமானத்தளம் வழமை போன்று இயங்குகின்றது என ரஸ்யா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தளத்திற்கு வெளியே பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதை சிரியாவிற்கான மனித உரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது.

ரஸ்யாவின் விமானப்பாதுகாப்பு ஆயுதங்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த வெடிப்புச்சத்தங்கள் கேட்டிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.