அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முதல் பெண் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நேற்று பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

சி.ஐ.ஏயின் இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக ட்ரம்ப் நியமித்ததையடுத்தே சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை ட்ரம்ப் நியமித்துள்ளார்.

ட்ரம்பின் இந் நியமனத்துக்கு நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாடாளுமன்ற செனட் சபை கடந்த 17 ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது.

இதையடுத்து சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.