தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட­ளா­விய ரீதியில் பல பகு­தி­க­ளிலும் அடை மழை பெய்­து­வரும் நிலையில், அம்­ம­ழை­யுடன் கூடிய காலநிலை­யா­னது மே மாதம் இறு­தி­வரை தொடரும் என கால நிலை அவ­தான நிலையம்  தெரி­வித்­துள்­ளது.

தற்­போது பெய்யும் மழை­யா­னது இன்­றைய தினம் சற்று குறை­வ­டையும் எனவும், எனினும் நாளை மறுதினம் முதல் மீள அதி­க­ரிக்கும் எனவும்  கால நிலை அவ­தான நிலைய பிரதிப் பணிப்­பாளர் மெரில் மெண்டிஸ் தெரி­வித்தார்.

 அதன்­படி மேல், சப்­ர­க­முவ, தென், மத்­திய மற்றும் வட மேல் மாகா­ணங்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஏனைய பகு­தி­களில் பிற்­பகல் 2 மணியின் பின்னர் இடி­யுடன் கூடிய மழையை எதிர்ப்­பார்க்­கலாம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

 சப்­ர­க­முவ மாகா­ணத்தில் சில இடங்­களில் 150 மி.மீ அள­வான மிகப் பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன்  மேல், மத்­திய மற்றும் ஊவா மேல் மாகா­ணங்­க­ளிலும் காலி மற்றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும் 100 மி.மீற்றருக்கும் அதி­க­மான பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இடி­யுடன் கூடிய மழை பெய்யும் வேளை­களில் அப்பிர­தே­சங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்றும் வீசக்­கூடும் என தெரி­விக்கும் கால நிலை அவ­தான நிலையம்  மின்னல் தாக்­கங்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை குறைத்­துக்­கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.