(கே.லாவண்யா)

ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட வேளை ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை களனி பாலத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்‍போது சுமார் 250.440 மில்லிகிராம் நிறையுடைய ஹேரோயின் போதைப்பொருளை முச்சக்கரவண்டியிலிருந்து மீட்டதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியையும்  கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய வத்தளை ஹுணுப்பிட்டியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.