ஹன்ஷி நிஷி டக்குமி கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். 

காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முறையே யூடின் சிந்துஜன் தங்கம் மற்றும் வெள்ளி, இந்திரகுமார் வெள்ளி மற்றும் தங்கம், கிருஸ்ணா வெண்கலம் மற்றும் வெண்கலம், ரிஸ்கி தங்கம் மற்றும் வெள்ளி, இக்லாஸ் வெள்ளி, அகிலேஸ் வெண்கலம் மற்றும் வெண்கலம், ஜவிநெஸ் வெண்கலம், மதுரன் வெண்கலம், ஹரிஹரன் வெள்ளி, கரின் துஷி வெள்ளி, அமென்டா மெக்கன்ஸி தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்கள் அடங்கலாக அபிஷிக் சிறந்த எட்டு போட்டியாளர் வரிசையிலும் தெரிவானார்.

இவர்களுக்கான பயிற்சிகளை சிகான்.அன்ரோ டினேஸ் மற்றும் சென்செய்.கபில்தேவ் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த போட்டிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அண்மையில் நடைபெற்றன.