ஐ.பி.எல். போட்டிகளின் பிளே ஓப் சுற்றுக்கள் நாளை ஆரம்பமாக உள்ளன.

11ஆவது ஐ.பி.எல். போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் சன்ரைசஸ் ஹைதராபாத், சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு தெரிவிவாகியுள்ளன.

அந்த வகையல் முதலாவது தகுதிகாண் சுற்று நாளை 22 ஆம் திகதி இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ளது. 

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அதனைத் தொடர்ந்து 23 ஆம் திகதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு 25 ஆம் திகதி இரண்டாவது தகுதிகாண் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் 27 ஆம் திகதி இறுதிப் போட்டி மும்பையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பிளே ஓப் சுற்றுக்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.