(ஆர்.யசி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  16 சுயாதீன உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் 23 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. 

இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுவது மற்றும் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெறும் என கூறப்பட்ட போதிலும் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவில்லை. 

இந்நிலையில் இந்த வாரம் நடுப்பகுதியில் சந்திப்புகளை இரு பகுதியினரும் நடத்தவுள்ளனர்.