ஹட்டன் பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

Published By: Robert

19 Feb, 2016 | 11:46 AM
image

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை 5 இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும் பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாத்திரிகர்கள் அதிகமாக வருவதன் காரணமாக விசேட பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தயிருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் சமன் யடவர தெரிவிக்கின்றார்.

அத்தோடு கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு செல்லும் அனைத்து பேரூந்துகளும் கினிகத்தேனை தியகல சந்தியின் ஊடாகவும் வேன் மற்றும் ஏனைய வாகனங்கள் ஹட்டன் வழியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி கொழும்பு தொடக்கம் ஹட்டன் வரை விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகையிரத சேவை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 7.30 மணியளவில் புறப்பட்டு ஹட்டன் புகையிரத நிலையத்தை நள்ளிரவு 1.00 மணியளவில் வந்தடையும்.

இந்த புகையிரத சேவை இம்மாதம் 19, 20, 21, 26, 27 ஆகிய தினங்களில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21