கிரீஸின் தெஸலாநிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ள சம்பவம் பெறும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெஸலாநிகி நகரின் ஆளூநராக 75 வயதான யானில் போட்டரிஸ்  கடமையாற்றி வருகின்றார்.

முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு இன்று அனுசரிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் அங்கு வந்த போது அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் 10 க்கும் மேற்பட்டோர் ஆளுநரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஆளுநர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.