கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நாம் வெற்றி கொண்டபோதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பிரிவினை காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி இன்னும் மந்த கதியில் உள்ளது. 

ஆகவே இனவாதத்தை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் நாடு அபிவிருத்தியடையும் என நீர்வளங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கடந்த 30 வருடமாக இடம்பெற்ற யுத்தத்தில் நாம் வெற்றி கண்டுள்ளோம். எமது காலதத்தில் ஆரம்பித்த யுத்தம் எமது காலத்திலேயே நிறைவடைந்தமை மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

நாம் இனம், மதம் போன்ற பேதங்கள‍ை கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே நாட்டை விரைவாக அபிவிருத்திக்கு ஈட்டுச் செல்லலாம் என்றார்.