காலி முகத்திடல் கடலில் குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த முதியவர், பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 75 வயதான நிமல் சிறிபால ஜயரத்ன என பொலிஸாரால் இணங்காணப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 2.15 அளவில் குறித்த நபர் கடலில் குதித்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த முதியவரின் சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.